Avvaiyar

1st - 2nd Century CE / Tamil Nadu / India

ஆத்திசூடி - Poem by Avvaiya

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயமிட்டுண்
ஒப்புர வொழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
273 Total read